Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்!…. 66 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 85 லட்சத்தை சுருட்டிய தம்பதி…. போலீஸ் நடவடிக்கை….!!!!

தமிழகத்தில் மோசடி சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் மோசடி செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த மோசடி வலைக்குள் தெரியாமல் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு மோசடி சம்பவம் அரங்கேறி உள்ளது. அதாவது,

நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அருகில் குச்சிபாளையத்தில் வசித்து வருபவர் விவசாயி கே.சபரிநாதன் (35) கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது “ஆகாஷ் சுருதி ஸ்பைஸ் பிரைவேட் நிறுவனத்தின் உரிமையாளர் துரைராஜ்(41) ஆவார். இவரது மனைவி சாரதா(35). இந்த தம்பதியினர் தங்களது நிதிநிறுவனத்தில் முதலீடு செய்தால் 8 -12 % வட்டி தருவதாக தெரிவித்தனர். அத்துடன் தேயிலை தோட்டங்களில் பயன்படுத்தப்படும் எந்திரங்களை குத்தகைக்கு எடுத்து பொதுமக்களுக்கு உணவுப்பொருட்களை விற்பனை செய்வதாக கூறினர்.

ஒரு முதலீட்டாளர் ரூபாய்.1 லட்சம் செலுத்தினால், நிறுவனம் 24 மாதங்களுக்கு மாதம் ரூபாய்.8 ஆயிரம் திரும்ப கொடுக்கும் எனவும் 2 வருடங்களுக்கு பின் முதலீடு செய்த தொகையில் 50 % முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தரப்படும் எனவும் அறிவித்தனர். இதனை உண்மை என நம்பி அந்நிறுவனத்தில் ரூபாய்.5 லட்சம் செலுத்தினேன். இதையடுத்து ஊக்கத்தொகை எனும் பெயரில் ரூபாய்.2 லட்சம் தந்தனர். எனினும் கடந்த சில மாதங்களாக ஊக்கத்தொகை வழங்குவதை நிறுத்தி விட்டனர். அதன்பின் அவர்கள் தலைமறைவாகி விட்டனர்” என அதில் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி விசாரணை நடத்திய பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாத்தல் சட்டப்பிரிவு 5, மோசடி உட்பட பல சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீலகிரி மாவட்டம் மேல்கூடலூர் கே.கே.நகரை சேர்ந்த எஸ்.துரைராஜ், அவருடைய மனைவி சாரதா போன்றோரை கைது செய்தனர். அதன்பின் விசாரணையில், அவர்கள் சென்னை, பெங்களூரு, சேலம், கேரளா, ஐதராபாத், மைசூரு, ஓசூர், ஊட்டி, கோவை ஆகிய இடங்களில் அந்நிறுவனத்தின் கிளைகள் வாயிலாக 66 முதலீட்டாளர்களிடம் ரூபாய்.1 கோடியே 85 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Categories

Tech |