Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…முயற்சி வெற்றியை கொடுக்கும்..சிந்தனை திறன் மேலோங்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே, இன்று வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள், வருமானத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு சிரமமும் இல்லாமல் வந்து சேரும். இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்த முயற்சி, இப்பொழுது வெற்றியை கொடுக்கும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிய சிந்தனை மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த கூடும்.

மனம் திருப்தியடையும். தொழில் தொடர்பான பயணம் வெற்றியை கொடுக்கும். உங்களுடைய செயல் திறன் மூலம் கடினமான பணியையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களும் கிடைக்கும். அதிகாரம் செய்யும் பதவிகளும் தேடிவரும். இன்று மாணவச் செல்வங்களுக்கு ஒரு சிறப்பான நாளாகவே இருக்கும்.

கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும், சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் முழுமையாக கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,  பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.

அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுப்பதற்கு வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும்நீங்கி செல்வாசெழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திசை:வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |