Categories
மாநில செய்திகள்

அதிமுக மாஜி எம்.எல்.ஏ கடத்தல்….. 3 கோடிக்காக விடிய விடிய நடந்த கொடூரம்…. சிக்கிய இன்னொரு மாஜி….!!!!!

முன்னாள் எம்எல்ஏ கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏவாக அதிமுக கட்சியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் இருந்தார். இவரை நேற்று முன்தினம் முன்னாள் அம்மா பேரவை செயலாளராக இருந்த சரவணன் என்பவர் கடத்திச் சென்றுள்ளார். அதோடு ஈஸ்வரனிடம் 3 கோடி பணம் கேட்டு சரவணன் உட்பட 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதன் பிறகு ஈஸ்வரனை விடிய விடிய அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதனால் பயந்து போன ஈஸ்வரன் தன்னுடைய வீட்டில் ரூ. 1.50 கோடி பணம் இருக்கிறது அதை நான் கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து ஈஸ்வரனை சரவணன் உட்பட 6 பேர் அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஈஸ்வரனிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு சரவணன் உட்பட 6 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ஈஸ்வரன் பவானி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அவர் நான் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது 2 ஜீப்பில் வந்த மர்ம நபர்கள் என்னை தலையில் அடித்து கண்களை கட்டி கடத்திச் சென்றனர். அவர்கள் என்னை கடுமையாக சித்திரவதை செய்து 3 கோடி பணம் மிரட்டினர். நான் என்னிடம் 3 கோடி பணம் இல்லை 1 1/2 கோடி பணம் மட்டும்தான் இருக்கிறது என்று கூறினேன். அதன் பிறகு அவர்கள் என்னை வீட்டிற்கு அழைத்து சென்று என்னிடம் இருந்த 1 1/2 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு விடுவித்தனர். இதில் எனக்கு சரவணன் என்பவரை மட்டும் அடையாளம் தெரிந்தது. எனவே சரவணன் உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரவணன் உட்பட 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் பலத்த காயங்களுடன் ஈஸ்வரன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Categories

Tech |