துபாய் என்றால் நமது தமிழர்கள் அதிக அளவில் வேலை செய்வது தான் அடிக்கடி நினைவிற்கு வரும். துபாயை பொறுத்தவரை அபுதாபி, கர்த்தார், ஏமன், சார்ஜா ஆகிய பகுதிகளில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றார்கள். இவர்களின் வசதிக்காக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து துபாய்க்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் டெல்லி, மும்பை, அகமதாபாத், பெங்களூர், சென்னை, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, திருவனந்தபுரம் போன்ற ஒன்பது நகரங்கள் இதில் அடங்கும். இந்த நிலையில் புதிதாக சில நகரங்களில் இருந்து துபாய்க்கு நேரடி விமானங்கள் இயக்க துபாய் அரசு முடிவு செய்திருக்கின்றது. அதன்படி அமிர்த சரஸ், திருச்சி, கோவை, கண்ணூர், கோவா, புவனேஸ்வர், கவுகாத்தி, பூனே போன்ற நகரங்களுக்கு விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
மேலும் இது தொடர்பாக இந்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சந்தியாவிற்கு துபாய் விமான போக்குவரத்து ஆணைய இயக்குனர் முஹம்மது அலி கடிதம் ஒன்றை எழுதியிருக்கின்றார். அதில் துபாயிலிருந்து இந்தியாவிற்கு வாரம் தோறும் 183 விமான சேவைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2014 ஆம் வருடம் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தற்போது 65,200 விமான இருக்கைகள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த சூழலில் கடந்த ஏழு வருடங்களில் மட்டும் இந்தியா துபாய் இடையேயான விமான சேவை சிறப்பான முறையில் வளர்ச்சியடைந்து இருக்கின்றது. அதிலும் குறிப்பாக சரக்கு போக்குவரத்து நல்ல லாபத்தை ஈட்டி தந்திருக்கின்றது. அதனால் இந்தியா துபாய் இடையேயான விமான சேவையை விரிவாக்கம் செய்ய ஆர்வமாக இருந்து வருகின்றோம்.
அதாவது வாரம் தோறும் 50 ஆயிரம் விமான இருக்கைகளை அதிகரிக்க திட்டமிட்டு இருக்கின்றோம். இந்த விமான சேவைக்கு அனுமதி அளிப்பது பற்றி இந்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் இரு நாட்டு விமான போக்குவரத்து ஆணைய பிரதிநிதிகள் சந்தித்து பேச உள்ள ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக தமிழகத்தின் கோவை, திருச்சி போன்ற நகரங்களில் இருந்து துபாய்க்கு நேரடி விமான சேவைகள் கிடைக்கும். இதன் மூலமாக தென் மாவட்டங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் இனிமேல் சென்னை வர வேண்டியதில்லை வேலைக்காக வர்த்தகம் தொடர்பாக துபாய் பயணம் மேற்கொள்ள இருக்கும் நபர்களுக்கு பணம் நேரம் போன்றவை மிச்சமாகும்.