இந்தியாவின் சொந்த டிஜிட்டல் பணத்தின் முதல் அறிவிப்பு கடந்த 2002 பட்ஜெட் சமர்ப்பணத்தின்போது வெளியிடப்பட்டது. டிஜிட்டல் கரன்சி என்றால் என்ன?, கிரிப்டோ கரன்சியா எப்படி மாற்றப்படும், ரூபாய்க்கு மாற்றாக இருக்குமா?, விலை நிலையாக இருக்குமா? என்ற சந்தேகம் நம்மிடையே இருக்கிறது. ஆனால் தற்போது ரசர்வ் வங்கி டிஜிட்டல் நாணயம் (அல்லது) CBDC என்றால் என்ன என்பதிலுள்ள சந்தேகங்களை விளக்கி வருகிறது.
முதல் முறையாக டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்போது, முறையான திட்டத்தை தயாரித்து பொருளாதாரத்தில் கொண்டுவர ரிசர்வ் வங்கி முயற்சிக்கிறது. மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணயம் (அல்லது) (CBDC) என்பது ஒரு நாட்டின் பியட் நாணயத்தின் டிஜிட்டல் பதிப்பாகும். மொத்த வணிகத்துறையில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்ட பிறகே டிஜிட்டல் நாணயம் சிறுவணிக அரங்கில் நுழையும்.
அத்துடன் CBDC டிஜிட்டல் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும். கிரிப்டோ கரன்சிகள் போன்ற ஏற்ற இறக்கங்களுக்கு பயப்பட வேண்டாம். ஏனென்றால் விலை ஸ்திரத்தன்மை இருக்கும். வெளிநாட்டில் நாணய பரிமாற்றம் இடைத் தரகர்கள் இல்லாமல் சாத்தியமாகும். ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கியும் கிரிப்டோ கரன்சிகளுக்குப் பதில் டிஜிட்டல் நாணயங்களை வெளியிடுகிறது.
CBDC-க்கு Blockchain தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். KYC போன்ற அனைத்து ஆவணங்களும் இவற்றில் துல்லியமாக இருக்கும். ஆகவே யார், யாருக்கு, எப்போது, எவ்வளவு பணம் மாற்றப்பட்டது என்பதைப் புரிந்துகொள்வது எளிதாகும். இதற்கிடையில் கருப்புபண புழக்கத்தை தடுக்கமுடியும். ஒவ்வொரு நாட்டின் மத்தியவங்கிகளும் இவற்றின் மீது துல்லியமான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.