Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் விழாவை புறக்கணித்த திரிணாமுல் காங்கிரஸ்..!!

மத்திய அமைச்சர் கலந்து கொள்ளும் அரசு விழாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் புறக்கணித்தனர்.

கொல்கத்தாவில் மெட்ரோ வழித்தடம் திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொள்கிறார். இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மற்றும் அம்மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவரின் பெயரும் அழைப்பிதழில் அச்சிடப்படவில்லை. இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அமைச்சர் கலந்து கொள்ளும் அந்நிகழ்ச்சியை புறக்கணித்தனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் கட்சி பிரமுகர் கூறுகையில், ‘இந்தத் திட்டம் மம்தா பானர்ஜி மூளையில் உதித்த திட்டமாகும். பல கட்டப் போரட்டங்களுக்குப் பின்னர், திட்டத்தை இங்கு கொண்டு வந்தோம். நாட்டின் நிதி நிலை அறிக்கையில் போராடி நிதி பெற்றோம். ஆனால், மம்தாவுக்கு அழைப்பில்லை’ என்றார்.

பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், ‘ கடந்த கால பாவங்களின் பலனை அனுபவிக்கிறார்’ என்று கூறினார். மேலும், ’மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்த போது அப்போதைய இடதுசாரி முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவை விழாவில் கலந்துகொள்ள அவர் அழைக்கவில்லை. அது மரியாதைக்குரிய அடையாளமா? ரயில்வே உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளை அழைத்துள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டுமா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கவில்லை’ என்றார்.

இந்த நிலையில் இன்று (பிப்13) மத்திய அமைச்சர், மெட்ரோ ரயில் வழித்தடத்தை திறந்து வைத்தார்.

Categories

Tech |