Categories
உலக செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற கிருஷ்ணன் ஜென்மாஷ்டமி…… “கோ பூஜை” செய்த ரிஷி சுனக்- அக்ஷதா…. வெளியான புகைப்படம்…..!!!!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய பிரதமர் தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நீதி மந்திரி ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு மந்திர லிஸ் டிரஸ் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்தின் பிரதமர் வேட்பாளர் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் சேர்ந்து கிருஷ்ண ஜென்மாஷ்டமி  முன்னிட்டு பசுமாட்டுக்கு ‘கோ பூஜை’ நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி லண்டனில் உள்ள பக்திவேதாந்தா மனோர் கோவிலில் வைத்து நடைபெற்றது. இந்த பூஜையின் போது பசுமாட்டிற்கு ஆரத்தி காண்பித்து, குங்குமம் வைத்து விண்ணப்பம் அக்ஷதா மூர்த்தியும் வழிபட்டனர். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றனர்.

Categories

Tech |