18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி
வேலூர் மாவட்டம் இடையஞ்சத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவலறிந்து சமூகநலத்துறை அலுவலர், வேலூர் தாலுகா காவல்துறையினர் மற்றும் சைல்டு லைன் களப்பணியாளர் ஆகியோர் இடையஞ்சாத்து சென்று திருமணம் குறித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயதே நிரம்பிய சிறுமிக்கு பெற்றோர்கள் கட்டாயத் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் மேற்கொண்டு வருவது தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து சிறுமியின் பெற்றோரை சந்தித்த அதிகாரிகள் 18 வயது முடிந்த பின்னரே திருமணம் செய்து வைக்க வேண்டும்.. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி சிறுமியின் பெற்றோரிடம் கடிதமொன்றை எழுதி வாங்கிக் கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து சிறுமியை மீட்டு வேலூர் மாவட்டத்தில் இருக்கும் அரசு பிற்காப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.