அமெரிக்க டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த புதன்கிழமை இரவு சாப்பிடுவதற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 பெண்கள் வந்தனர். அதன்பிறகு சாப்பிட்டு முடித்துவிட்டு வாகன நிறுத்தும் இடத்தில் தங்கள் காரை எடுக்க வந்ததனர். அப்போது அங்கு வந்த அமெரிக்க பெண் ஒருவர் இவர்களை வழிமறித்து ஆவேசமாக தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அமெரிக்க பெண்மணி கூறியது, நான் இந்தியர்களை வெறுக்கிறேன். இந்த இந்தியர்கள் அனைவரும் ஒரு சிறந்த வாழ்க்கை விரும்பி அமெரிக்காவிற்கு வருகிறார்கள். நான் எங்கு சென்றாலும் நீங்கள் இந்தியர்கள் எல்லா இடங்களில் இருக்கிறீர்கள் இந்தியாவில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருந்தால் நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள்? இந்தியாவிற்கு திரும்பச் செல்லுங்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
This is so scary. She actually had a gun and wanted to shoot because these Indian American women had accents while speaking English.
Disgusting. This awful woman needs to be prosecuted for a hate crime. pic.twitter.com/SNewEXRt3z
— Reema Rasool (@reemarasool) August 25, 2022
அதன் பிறகு அவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கினார். இந்த சம்பவம் புதன் கிழமையன்று இரவு நடந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்த ஒரு நபர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். அதில், இந்தச் சம்பவம் டெக்ஸாஸ் டல்லாஸ் பகுதியில் என் அம்மாவும் அவரது மூன்று நண்பர்களும் இரவு உணவிற்கு சென்ற பிறகு நடந்தது என்று பதிவிட்டு உள்ளார். இந்த இந்திய பெண்களை அமெரிக்கா பெண்மணி தாக்கும் அதிர்ச்சிகரமான வீடியோ அமெரிக்கா முழுவதும் இந்திய-அமெரிக்க சமூகத்தினரிடையே வைரலாக பரவி வருகிறது. அதனை தொடர்ந்து இந்திய பெண்களை தாக்கி அமெரிக்க பெண்ணை டெக்சாஸில் உள்ள போலீசார் இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அந்தப் பெண் மெக்சிகோவை பூரிவிகமாகக் கொண்டவர் என்றும் அவரது பெயர் எஸ் ள்மரால்டா என்றும் அவருக்கு நான்கு இந்திய-அமெரிக்க பெண்களை கொண்ட குழுவைத் தாக்கி இனரீதியாக துஷ்பிரயோகம் செய்தது தெரியவந்தது. மேலும் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.