தன்னை வெளிநாட்டவர்கள் எப்போது வேண்டுமானாலும் கொன்று விடலாம் என அஞ்சுகிறார் வட கொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உன்.
தன்னை எதிர்ப்பவர்கள் தன் சொந்தக் குடும்பத்தாராக இருந்தால் கூட கருணையின்றிக் கொலை செய்யும் கிம் ஜாங் உன்னுக்கும் மரண பயம் இருக்கின்றது. தன்னை வெளிநாட்டவர்கள் உட்பட எதிரிகள் எப்போது வேண்டுமானாலும் கொலை செய்ய முயற்சிக்கலாம் என அஞ்சுகின்றார். ஆகவே, வட கொரியாவின் தலைநகரான Pyongyang இல், தானும் தனது அதிகாரிகளும் வாழ்வதற்கு, யாரும் எளிதில் நுழைய முடியாத தடை செய்யப்பட்ட நகரம் ஒன்றை உருவாக்கி வருகிறாராம் கிம். அத்துடன் அந்த நகரில், எட்டு ஆடம்பர மாளிகைகளை தனக்காகக் கட்ட திட்டமிட்டுள்ளார்.
அதாவது, அவர் எந்த வீட்டில் தூங்குகின்றார் என்பது எதிரிகளுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக, கிம் இப்படி ஒரு திட்டமிட்டுள்ளாராம். ஒரே வீட்டில் தூங்காமல், ஒவ்வொரு நாள் அவர் ஒவ்வொரு வீட்டில் தூங்குவாராம். சீனாவின் முதல் பேரரசரான Qin Shi Huang என்பவர், தன்னை எதிரிகள் கொன்றுவிடலாம் என்பதற்காக இப்படித்தான் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வீட்டில் தூங்குவாராம். அவரைப் பின்பற்றி, இப்போது கிம் அதே போல எட்டு வீடுகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.