Categories
தேசிய செய்திகள்

ட்ரம்ப் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – யெச்சூரி தகவல்.!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் இந்திய வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார்.

ஒடிசா மாநிலத் தலைநகர் புபனேஸ்வரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பிப்ரவரி 24 மற்றும் 25ஆம் தேதிகளில் இடதுசாரி தொண்டர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இந்தியப் பயணத்துக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுப்பார்கள்.

அது டெல்லியாகவோ அல்லது குஜராத்தாகவோ இருக்கலாம். முதலில் அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது. அந்த அழுத்தத்துக்குப் பணிந்து நரேந்திர மோடி, பொருளாதாரக் கதவுகளை திறக்கத் தயாராக உள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம், ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 370 நீக்கம் ஆகியவற்றில் அமெரிக்கா கொடுத்த ஆதரவுக்கு அவர்கள் பெறும் லாபம் இதுவாகும்.

மாறாக, இந்தப் பயணத்தில் இந்தியர்களின் நலன் துளியும் இல்லை. மேலும் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த யெச்சூரி, இது முற்றிலும் தேவையற்ற ஒன்று” என்றார்.

Categories

Tech |