Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்ணீர் எடுக்க சென்ற முதியவர்….. திடீரென வந்து தாக்கிய விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டெருமை தாக்கியதால் முதியவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வபோது சுற்றுலா பயணிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கு நிற்கும் காட்டெருமைகள் மற்றும் யானைகளை புகைப்படம் எடுக்கின்றனர். இதனால் வனவிலங்குகள் பொதுமக்களை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் நுழைவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். அவ்வபோது உயிர் சேதமும் ஏற்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டக்கானல் பகுதியில் காட்டெருமைகள் முகாமிட்டுள்ளது.

அதே பகுதியில் வசிக்கும் முருகையா(72) என்பவர் கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக சென்றபோது புதர் மறைவில் நின்று கொண்டிருந்த காட்டு யானை அவரை தாக்கியது. இதனால் படுகாயமடைந்த முருகையாவே அக்கம் பக்கத்தினர் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் பொதுமக்களை கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். பல்வேறு குழுக்களாக பிரிந்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |