தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்த டெண்டர் முறைகேடு வழக்குககில் நீதிபதி உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.
முந்தை அதிமுக ஆட்சியில் டெண்டர் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருந்ததாக கூறி அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக்கோரி அறப்பொரு இயக்கம், திமுகவினருடைய அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கோரிக்கை வைத்தனர். உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு, அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. இந்த நிலையில் ஆட்சிமாற்றத்தையடுத்து, வேலுமணி உட்பட 17 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் உயர்நீதிமன்றம் நியமித்த அதிகாரி மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையை புறக்கணிக்க அரசு முடிவு எடுத்துள்ளதாகவும், விசாரணை நடைமுறையை தவறாக பயன்படுத்தப்படுகின்றது என தெரிவித்திருக்கிறார். மேலும் புகார்தாரர்கள் தெரிவித்த 14 குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக விசாரித்து, தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை மீறி,
– வழக்கு பதிவு செய்ததற்கான காரணங்கள் குறித்து முதல் தகவல் அறிக்கையில் விவரங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை எனவும், அந்த மனுவவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஊழல் தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் அடிப்படையில் வேலுமணி மீது பதிவான இரு வழக்குகளை எதிர்த்து தனி நீதிபதி முன்பாக தான் வழக்கு தொடர்ந்து வாதிட வேண்டுமெனவும், இரு நீதிபதிகளை அமர்வில் இந்த வழக்கானது விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிடப்பட்டது.
வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞரை பொருத்தவரை இந்த புகாரில் முகாந்திரம் இல்லை என்று ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை எதிர்த்து அரசோ, மனுதாரர்களோ வழக்கு தொடரவில்லை எனவும், தணிக்கை குழு அறிக்கையில் தனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் கூறப்படாத நிலையில் அரசியல் உள்நோக்கத்தோடு லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கின்றனர்.