செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, இப்போது அரசு மக்களுடைய கருத்தை கேட்டு, நாங்கள் மின் கட்டணத்தை குறைப்பதா ? வேண்டாமா ? என்று யோசிப்போம் என்பது ஒரு பெரிய நாடகமாகத்தான் இருக்கிறதே தவிர, இது உண்மையாவே, ஜனநாயக முறைப்படி மக்களுடைய கருத்தை கேட்டு, ஒரு பாலிசி சேஞ்ச் செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இப்பொழுதே தமிழக மிசாரத்துறை அமைச்சரின் சகாக்கள் ஆங்காங்கே பேரம் பேச ஆரம்பித்து விட்டார்கள்,
இன்டஸ்ட்ரியல் யூனிட் நீங்கள் குரூப்பா வந்து பேசினீர்கள் என்றால், மின்சார கட்டணம் ஏற்றியதை இவ்வளவு குறைப்போம், பெரிய பெரிய குரூப் தனித்தனியா வாங்க, டெக்ஸ்டைல் அசோசியேஷன் தனியாக வாங்க, எம்எஸ்எம்இ கிளஸ்டர் தனியாக வாங்க, பெரிய பெரிய நிறுவனங்கள் தனித்தனியா வாங்க என்று இந்த நாடகமே வந்து பார்த்தீர்கள் என்றால்… ஆங்காங்கே வசூல் வேட்டை நடத்துவதற்காக மட்டும்தான்.
மக்களிடம் சென்று நாங்கள் கருத்து கேட்கின்றோம், அதன் மூலமாக நாங்கள் ஏற்றிய மின் கட்டணத்தில் ஒரு பகுதியை குறைக்கிறோம் என்று சொல்வது, இந்த திமுக கட்சி … குறிப்பாக மின்சாரத்துறை மந்திரி, இந்த அனைத்து நிறுவனங்களிடமிருந்து ஒரு வசூல் வேட்டை நடத்துவதற்காக போடப்படுகின்ற கபட நாடகம் தான், இந்த மக்களிடம் கருத்து கேட்பது.
அதனால் கபட நாடகத்தை எல்லாம் நிறுத்திவிட்டு, மக்களிடம் கருத்து கேட்கின்றேன் என்ற நாடகத்தை நிறுத்திவிட்டு, உடனடியாக அவர்கள் ஏற்றிய மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியினுடைய கோரிக்கை. அதை இந்த மாநில அரசு செய்ய வேண்டும், மறுபடியும் தவறு மேல் தவறு செய்து அடுத்து யாரிடம் எவ்வளவு பணம் கேட்டார்கள் ?
யாரை வர சொன்னார்கள் ? எங்கெல்லாம் மீட்டிங் போட்டார்கள் ? அதெல்லாம் பாரதிய ஜனதா கட்சி கொண்டு வருவதற்கு வேண்டாம் என்று நினைக்கின்றோம். ஏனென்றால் ஏகப்பட்ட விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது, திரும்பத் திரும்ப இவர்கள் ஊழல் செய்தார்கள் என்று எவ்வளவு நாளைக்கு பேசுவது என தெரிவித்தார்.