செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நம்முடைய அரசியலமைப்பு சட்டம் உங்களுக்கு தெரியும், பொதுவாக மத்திய அரசு கொரோனாவிற்கு ஃபேஸ் 1-ல் இந்தியா முழுவதும் இதை செய்யுங்கள் என்று சொன்னவுடனே, அதற்கு முதல் எதிர்ப்பு கொடுத்தது இங்கே இருக்கக்கூடிய முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள். கொரோனாவில் நாடு முழுவதுமே சேர்த்து ஒரு பொது திட்டம் கொண்டு வரும் போது,
அதை எதிர்க்கட்சி தலைவராக இருந்த திரு. முக . ஸ்டாலின் அவர்கள் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அதை எதிர்த்தார்.அதனால் தான் ஃபேஸ் 1-ல் நேஷனல் லாக் டவுன் பார்த்தீர்கள் என்றால் மோடிஜி போடவில்லை, மாநில அளவில் போடுங்கள், நீங்கள் அதை பார்த்து முடிவெடுங்கள், உங்களுக்கும் அதிகாரம் இருக்கிறது என்று சொல்லி இருக்கின்றார். இது இன்றைக்கு ஆன்லைன் ரம்மி தமிழ்நாட்டை பாதிக்கிறது காரணம் என்னவென்றால்..
72 சதவீத தமிழக மக்கள் சமூக வலைதளத்தில் இருக்கிறார்கள். இமாச்சலப் பிரதேஷ், பீகார், உத்தரபிரதேசத்திற்கோ கம்பேர் பண்ணும் போது, நாம் எங்கேயோ முன்னாடி போய் விட்டோம். இன்றைக்கு ஆன்லைன் ரம்மி எல்லாமே பார்த்தீர்கள் என்றால், இன்டர்நெட், சோசியல் மீடியாவை சார்ந்தது. சமூக வலைதளத்தை திறந்தால் ஆன்லைனில் ரம்மி பேனர் விளம்பரம் மேலே வருகிறது.
நீங்களே வேண்டாம் என்றாலும் அவர்கள், இதை விளையாடுங்கள், அதை விளையாடுங்கள் என டிவி விளம்பரம் வருகிறது. பெரிய பெரிய நடிகர்கள், சினிமா ஸ்டார், ஸ்போர்ட்ஸ் ஸ்டார் எல்லாம் நடிக்கிறார்கள். இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய பெரிய பிரச்சினை. தமிழ்நாட்டினுடைய 30 பேர் இறந்திருக்கிறார்கள், தலையாய பிரச்சனையாக நாம் பார்க்கும் போது, இதை மாநில அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள் என தெரிவித்தார்.