நாட்டின் முன்னணி நிறுவனங்களில் இன்போசிஸும் ஒன்று. இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி ஆவார். இவரின் மகளான அக்சதாவுக்கும் பிரிட்டன் நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்குக்கும் 2009-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துள்ள ரிஷி சுனக் முதலீட்டு வங்கி ஆலோசகராக பணியாற்றிவந்துள்ளார்.
2014ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்ட வந்த இவரை பிரிட்டன் நிதியமைச்சராக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது நியமித்துள்ளார்.