போதை மருந்து விற்பனையில் 100 இடைத்தடகர்கள் ஈடுபட்டு வந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள சின்மனூரில் போதை ஊசி விற்பனை மற்றும் பயன்படுத்திய ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்த நிலையில் கைதானவர்களில் ஜோனர்த்தன் மார்க் என்பவர் போதை மருந்து விற்பனையை செய்து வந்திருக்கின்றார். இவர் இதற்காக ஒரு தனியார் மருந்து விற்பனை நிறுவனம் ஆரம்பித்து அந்நிறுவனத்தின் பெயரில் ஊக்கம் மருந்துகளை மொத்தமாக கொள்முதல் செய்து பல மாவட்டங்களுக்கும் புதுச்சேரி கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் கடத்தி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போதை மருந்துகள் தேவைப்படும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வலைதளம் மூலம் முன்பதிவு செய்து கூகுள் பே மூலம் பணத்தை செலுத்தி பேருந்து மூலம் அவர்களுக்கு மருந்துகள் அனுப்பி வைக்கப்படுகின்றது. இதுப்பற்றி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தற்போது போலீசார் விசாரணையில் பல தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பற்றி போலீசார் கூறியுள்ளதாவது, கைது செய்யப்பட்ட ஜோனத்தன் மார்க் நடத்திய நிறுவனத்தின் மருந்து விற்பனை இணையதளமானது எளிய வடிவில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதில் முன்பதிவு செய்யும் பொழுதே செல்போன் எண்ணை உள்ளிடும்படி இருக்கின்றது.
பின் பதிவு செய்தவர்களின் விவரங்களை சரிபார்க்க ஒவ்வொரு மாவட்டத்திலும் இடைத்தரகர்கள் செயல்பட்டு வந்திருக்கின்றார்கள். அதன்படி தமிழகம் மற்றும் கேரளாவில் சுமார் 100க்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள் செயல்பட்டு வந்துள்ளார்கள். இந்த போதை மருந்து பத்து மில்லி லிட்டர் அளவு கொண்ட ஒரு பாட்டில் 250 முதல் 300 வரை கொள்முதல் செய்து அதை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்திருக்கின்றனர் என கூறியுள்ளனர். இந்த நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய சாய் அக்ஷய் கவுடா, நவீன், ஜாகிர் உசேன், பாரத், உதயகுமார், குணநாதன் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளார்கள்.