Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS கேட்ட ஒரே கேள்வி…. உங்க தாத்தாவால் கூட பதில் சொல்ல முடியாது… ஜெயக்குமாரை சீண்டிய புகழேந்தி ..!!

செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, அதிமுக ஆட்சியில் இருந்த பொது அமைச்சர்களாக இருந்தவர்கள் இந்த முதல்வர் காலிலும், அங்கு இருக்கின்ற அமைச்சர்கள் காலிலும் விழுந்து, எங்களை கைது செய்யாதீர்கள் என்று பாதுகாத்து, இதற்காக இந்த கட்சியை பிளவு படுத்தியுள்ளனர்.  ஜெயக்குமாரும் சேர்ந்து கட்சியை உடைக்க வேண்டும் என எண்ணுகின்றனர்.ஒரு பக்கம் ஓபிஎஸ் அன்பாக வாருங்கள் என்கிறார், வந்தால் ஒத்துப் போவதற்கு தயாராக இருக்கிறார்.

நாடு முழுவதும் மக்கள் அதைத்தான் அறிவுறுத்துகிறார்கள். யார் ஊழலை பற்றி பேசுவது ? அப்போ அம்மா தெரியாமல் அவரை உட்கார வைத்தார்களா முதலமைச்சர் பதவியில், ஒரே ஒரு கேள்வி கேட்டார்… அந்த கேள்விக்கு உங்களால் இல்லை, உங்கள் தாத்தாவால் கூட பதில் சொல்ல முடியாது.  அம்மா இருக்கின்ற வரைக்கும் எனக்கு வீழ்ச்சியே கிடையாது, ஒரு குறையும் கண்டுபிடித்து ஓபிஎஸ்-ஐ தூரமாக வைக்கவில்லை அம்மா என சொன்னார்.

உங்களை எத்தனை முறை எடுத்து இருக்கிறார்கள், எத்தனை முறை மந்திரி இல்லாமல் வைத்திருக்கிறார்கள். இவ்வளவு பணமும், இவ்வளவு சொத்தும் கொள்ளையடித்த சொத்தும் ஜெயக்குமாருக்கு எங்கே இருந்து வந்தது ? அவ்வளவு சீக்கிரம் விட்டு விடமாட்டேன். எனக்கும் செய்தியாளர்களுக்கும் எப்போதும் நல்ல உறவு இருக்கும், அதை நான் கெடுத்துக் கொள்வதற்கு விரும்பவில்லை, கீழேயும் போகவில்லை பேசுவதற்கு என ஈபிஎஸ் அணியை எச்சரித்தார்.

Categories

Tech |