Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் பண்ணுனது தப்புன்னு , எந்த தொண்டரும் சொல்லல – கோவை செல்வராஜ் பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ், இன்றைக்கு தொண்டர்கள் தெளிவாக இருக்கிறார்கள், நீதிமன்றம் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது. நீதிமன்றத்தின் உடைய தீர்ப்புகளும் இறுதி நிலையில் இருக்கிறது. இதன் பிறகு இவர்கள் மேல்முறையீட்டிற்கு உச்ச நீதிமன்றத்திற்கும் சென்றாலும், அங்கும் நியாயம், தர்மத்தின் பக்கம் தான் இருக்கும். அதனால் உண்மையாக தர்மம், சத்தியம் நிலைக்கு வேண்டும்,

அண்ணா திமுகவினுடைய எல்லா தொண்டர்களும், எந்த தொண்டர்களும் இதுவரைக்கும் ஓபிஎஸ் தப்பு செய்து விட்டார்கள் என யாரும் சொன்னதே கிடையாது, வேற யாரும் சொன்னதும் கிடையாது. காரணம் என்னவென்றால் அவர்களெல்லாம் அப்பாவிகள், இந்த கட்சிக்காக உயிரை கொடுத்துவிட்டு,  தலைவர் காலத்தில் இருந்து பாடுபட்டவர்கள், வேர்வை சிந்தி 1000 வாட்ஸ் பல்பில் உயிரை கொடுத்து எம்ஜிஆர் இந்த கட்சியை காப்பாற்றினார்.

அம்மா வந்து தன்னுடைய உயிரை இழந்து, 28 வருடமாக இந்த கட்சிக்காக உழைத்து, வெளிநாடு சென்று மருத்துவம் பார்த்து இருந்தால் அவர் இன்றைக்கு உயிரோடு இருந்திருப்பார். எல்லாம் விட்டுட்டு கட்சிக்காக உழைத்து கட்சி ஆட்சியை கொண்டு வந்தார்கள், தற்போது அம்மாவையும் இழந்துவிட்டோம். இந்த  இயக்கத்தை 50 வருடம்.. இன்னும் ஒரு மாதம் போனால் ஐம்பதாவது ஆண்டு விழா, இப்படிப்பட்ட சூழலில் இவர்கள் தன்னிச்சையாக,

சுயநலத்திற்காக, தன்னுடைய சுய கம்பெனியை போல் நடத்துவதற்கு முயற்சிப்பதை ஒருநாளும் தொண்டர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். கட்சியினுடைய தலைவர்களாக இருக்கக்கூடிய கீழ் மட்டத்தில் ஒன்றிய செயலாளர், நகர செயலாளர், வார்டு செயலாளர் அவர்கள் எல்லோருமே ஆதங்கப்படுகிறார்கள். எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த சண்டையில் குழப்பம் செய்ய வேண்டாம் என்று அமைதியாக இருக்கிறோம், இதற்கு ஒரு விடிவு காலம் வர வேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |