Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! சந்திரமுகி படத்தில் நடித்த பாப்பாவா இது….? இப்ப அவருக்கே ஒரு பாப்பா…. வியந்து பார்க்கும் ரசிகர்கள்….!!!!

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த  2005 ஆம் வருடம் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் ஜோதிகா, பிரபு, நாசர், நயன்தாரா, வடிவேலு போன்ற பலர் நடித்திருந்தனர். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் உடன் பொம்மி என்னும் கதாபாத்திரத்தில் குட்டி பாப்பாவாக நடித்த பிரகர்ஷிதாவின் தற்போதைய போட்டோ வைரலாக பரவி வருகின்றது.

அந்த போட்டோவில் கையில் குழந்தையுடன் இருக்கின்றார் பிரகர்ஷிதா. ஸ்ரீனிவாசன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு குழந்தை இருக்கின்றது. தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து இருக்கின்றார். மேலும் பிரகர்ஷிதாவின் போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் உங்களை இப்போதுதான் பாப்பாவாக பார்த்தது போல் இருக்கின்றது அதற்குள் உங்களுக்கு ஒரு பாப்பாவா என கேட்டு வருகின்றார்கள். பிரகர்ஷிதா, வேலன், ராஜராஜேஸ்வரி போன்ற சீரியல் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |