செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, நீங்கள் கண்ணா பின்னாவென்று ஓபிஎஸ் கொள்ளை அடித்தார் என்று இப்போ பேசுறீங்க ? கொள்ளை அடித்ததாக சொல்லும் நீங்கள் அப்போது ஏன் சும்மா இருந்தீர்கள் ? அப்போது உங்களை எதிர்த்து தான் ஓட்டு போட்டார். அப்பவே ஊழல் ஆட்சி, ஊழல் முதலமைச்சர் என்று சொன்னார். ஏன் மீண்டும் சேர்த்துக் கொண்டீர்கள் ? உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் சொல்கிறேன்… வைத்தியலிங்கம், ஜேடிசி பிரபாகரன் எல்லோருக்கும் தெரியும்.
அதிமுக இணையும் போது ஓபிஎஸ் தலைமை கழகம் வருவதற்கு தாமதமாகுது என்று, பிஜேபி சொல்லுச்சு என்று சொல்லி, இரண்டு அமைச்சர்களும் ஓபிஎஸ் காலில் விழுகிறார்கள், இரண்டு அமைச்சர்கள் வீட்டில் காலில் விழுந்து, அண்ணா லேட் செய்யாதீர்கள் வாங்க என்று கூப்பிடுகிறார்கள். கட்சியை நீங்கள் எடுத்துக்கோங்க என்று சொல்லி தான் கொடுத்தீர்கள்..
டிசம்பர் வரைக்கும் நல்லா இருந்தது, தீர்மானம் நிறைவேற்றும் வரைக்கும் நல்லா இருந்தது, அதை தானே கோர்ட் சொல்லியுள்ளது. இபிஎஸ்க்கு என்ன கோபம்? உசிலம்பட்டியில் இருந்து ஒரு எம்எல்ஏ வந்துவிட்டார், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனை தொடர்ந்து எம்எல்ஏக்கள் வருகிறார்கள். எங்கே பார்த்தாலும் ஓபிஎஸ் அலை வீசுகிறது, ஏகப்பட்ட தொண்டர்கள் வருகின்றார்கள். எனக்கே ஓய்வில்லை, அவ்வளவு பேர் வருகிறார்கள். ஒவ்வொரு மாவட்டமாக காலியாகிறது. இதை பார்க்க முடியாத சூழ்நிலையில் எடப்பாடி கோஷ்டி உள்ளது.
பாகிஸ்தான்-இந்தியா மேட்ச் பார்த்தோம். அப்போது உள்ளே வந்து பேட்ஸ்மேன் நின்ற உடனே இப்படி தான் இருந்தது ஓபிஎஸ் மீது இருந்த கருத்து. ஒரு 10 ரன் கூட ஓபிஎஸ் அடிக்க மாட்டார்கள், அவ்வளவுதான் என இருந்தது, பிறகு சிறிது நேரம் கழித்து கமெண்ட்ரி கேட்கிறார்கள் எப்படி போய்க்கொண்டிருக்கிறது ? 25 ரன் அடித்து விட்டார்கள் என்று சொல்கிறார், உடனே அப்படியா 25 வரைக்கும் இருக்கிறாரா என்று… இப்போது என்ன போய்க் கொண்டிருக்கிறது ? 50 ரன்னுக்கு மேல் எடுத்து விட்டார், இப்போது என்ன நிலமை ? 75 ரன் அடித்து விட்டார். இப்போது 100 தான். இதுதான் இப்போ தற்போதைய நிலைமை, ஓபிஎஸ் இல்லாமல் அதிமுகவை நடத்த முடியாது என தெரிவித்தார்.