செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி, அண்ணா திமுக பலவீனம் அடைகின்ற வகையில் பிளவுகள் தொடர்கிறது. இது அண்ணா திமுகவை மேலும் மேலும் பலகீனப்படுத்தும், அது மத்தியில் ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சி, தமிழகத்தில் தேசிய சக்திகள், மதவாத சக்திகள் கால்ஊன்றுவதற்கு மட்டும்தான் அது உதவிகரமாக இருக்கும். அதே போல திமுகவை வலிமை பெற செய்வதாக தான் அது அமையும்.
அண்ணா திமுக மீண்டும் ஆளுகின்ற கட்சியாக வரவேண்டும் என்றால், அண்ணா திமுக அடிப்படை தொண்டர்களால் ஒரு தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒற்றை தலைமை என்பது யாருக்கும் மாற்று கருத்தை கிடையாது, அத்தனை அண்ணா திமுக தொண்டர்களும் ஒற்றை தலைமையை தான் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் பிரச்சனை என்னவென்றால், அந்த ஒற்றை தலைமையை தேர்ந்தெடுக்க அதிகாரம் படைத்தவர்கள் யார் ?
அது எடப்பாடி பழனிச்சாமி தன்னை சுற்றி இருக்கின்ற அந்த பொதுக்குழு உறுப்பினர்கள், அதைக் கூட தாண்டி ஒரு 4, 5 அமைச்சர்கள் ஒரு முடிவு எடுத்து, அதை பொதுக்குழு உறுப்பினர்கள் மூலமாக அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்கின்ற அளவிற்கு இந்த இயக்கத்திற்கு திணிக்க பார்க்கிறார்கள். இன்றைக்கு இருப்பவர்களின் நோக்கம் சிந்தனைத் தெளிவு… இப்போ எடப்பாடி பழனிச்சாமியோ அல்லது திரு ஓபிஎஸ் அவர்களோ 2026 இல் அண்ணா திமுக ஆளுகிற கட்சியாக வரவேண்டும், திமுகவை களத்தில் வீழ்த்த வேண்டும் அல்லது
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் துணை இல்லாமல் 2014 இல் மோடியா? லேடியா? என்றதைப் போன்று அல்ல தனித்து களம் கண்டு 40க்கு 40 முடிந்தால் குறைந்தபட்சம் 25, 30 தொகுதிகளை வெற்றி பெற வேண்டும் என்றால் இந்த இயக்கம் எப்படி கட்டமைக்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாக வைத்தால் உள்கட்சிகுள் இருக்கின்ற பிரச்சினைகள் மிக சிறியதாகிவிடும், அது பெரிதாக தெரியாது என கூறினார்.