Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! பாராட்டுகள் கிடைக்கும்..! அன்பு வெளிப்படும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் பக்குவமாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். அனைவரிடமும் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

உங்களை உதாசீனப்படுத்திய அவர்கள் உதவிக்கேட்டு வரக்கூடிய சூழல் உண்டாகும். பழைய பிரச்சினைகளை தீர்க்க முழு முயற்சியுடன் செயல்படுவீர்கள். எந்தவொரு காரியத்தை செய்யும்முன் தீர ஆலோசித்து செய்வது நல்லது. மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவைப்படும்.

அனைவரிடமும் அனுசரித்துச் செல்லவேண்டும். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் நட்பு பாராட்டுவார்கள். எதிர்பார்த்த பண உதவியும் வந்துச்சேரும். தொழிலை விரிவுப்படுத்தக்கூடிய எண்ணங்களும் மேலோங்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுத்து வாருங்கள் இன்றையநாள் மிகவும் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |