கல்லூரி மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியத்திலிருந்து நாமக்கலுக்கு தினமும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக டவுன் பேருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென அந்த பேருந்தானது நிறுத்தப்பட்டதாக சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் அந்த பேருந்து மூலம் கட்டணம் இல்லாமல் பயணம் செய்த அரசு மற்றும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் நேற்று திருச்சி-நாமக்கல் சாலையில் இருக்கும் கார்த்திகைபட்டி பிரிவு ரோடு அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் தகவலறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய பின்னர் மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு விட்டு சென்றார்கள்.