திருவள்ளூர், காட்டுப்பள்ளியில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் சரக்குப்பெட்டகங்களை கையாளும் முனையத்தில் பெண் சிங்கம் ஒன்று அப்பகுதியில் திரிவதைப் போன்ற படம் வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகின்றது. வனப்பகுதி என்பதால், அங்கு சிங்கம் நடமாட்டம் உள்ளதா? என கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவுகளை வைத்து காமராஜர் துறைமுக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து ஒரு சிங்கம் மட்டுமே உலாவும் புகைப்படம் வந்த நிலையில், மீண்டும் அதே பகுதியில் மூன்று சிங்கங்கள் நடந்து வருவதாக படங்கள் வெளிவந்துள்ளன.இதனால் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.