Categories
மாநில செய்திகள்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தத் தடை: சென்னை காவல் ஆணையர்..!

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்கள் நடத்தக்கூடிய எந்த அமைப்பினருக்கும் காவல்துறை அனுமதி அளிக்காது என சென்னை காவல் ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலி, உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவைகளை நடத்த எந்த அரசியல் கட்சியினருக்கும், அமைப்பினருக்கும் அடுத்த 15 நாள்களுக்கு சென்னை காவல்துறை அனுமதி வழங்காது என காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை, ராஜரத்தினம் மைதானம் உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி கோரிய கட்சியினர் மற்றும் அமைப்புகளுக்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை. மேலும் வருகிற 13ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை இவ்வாறான அனுமதி மறுக்கப்படும் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

chennai-police

மேலும் அவர், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் நடக்கக்கூடிய மதம் சார்ந்த நிகழ்ச்சி, திருமண ஊர்வலம், மாரத்தான் உள்ளிட்டவைகளுக்கு அனுமதியளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |