மத்திய பிரதேசத்தை சேர்ந்த உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ராஜூ படோரியா என்பவர், பாஜக பிரமுகரை கொல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.அதையடுத்து அவரை ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேச சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு ஜாமின் கிடைத்தது. அதையடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் ராஜு படோரியாவை டிரம்ஸ் அடித்து வரவேற்றனர். ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட பின்னர் அவருக்கு பாலால் அபிஷேகம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Categories