நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படமான ‘Thalaivar 170′ குறித்த அப்டேட் ஒன்று திரையுலக வட்டாரங்களில் கசிந்துள்ளது. ‘டான்’ திரைப்பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி ரஜினியின் 170ஆவது திரைப்படமான ‘Thalaivar 170’ திரைப்படத்தை இயக்கவுள்ளார் எனத் தகவல் கசிந்துள்ளது. ஏற்கெனவே ரஜினியிடம் கதை சொன்ன இயக்குநர்களின் பட்டியலில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இருந்து வந்த நிலையில், தற்போது இப்படி ஒரு தகவல் கசிந்துள்ளது.
Categories