Categories
உலக செய்திகள்

போரில் ரஷ்யாவை வீழ்த்த…. உக்ரைனுக்கு அதிபயங்கர ஆயுதத்தை…. வழக்கும் அமெரிக்கா….!!

ரஷ்ய டிரோன்களை சுட்டு வீழ்த்த உதவும் அதிநவீன வாம்பயர் ராக்கெட் லாஞ்சர்களை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் இடையிலான மோதல் போராக வெடித்தது. கடந்த பிப்ரவரி மாதம் 24- ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியது. மிக குறுகிய காலத்தில் உக்ரைனை முழுமையாக ஆக்கிரமித்து விடலாம் என கருதி ரஷ்ய போரை தொடங்கிய சூழலில், உக்ரைன் ராணுவம் கடுமையாக பதிலடி கொடுத்து வருவதால் போர் முடிவின்றி நீண்டு கொண்டு இருக்கின்றது. உக்ரைன் மீது ரஷ்ய போரை தொடங்கி 6 மாதம் நிறைவடைந்துள்ளது. ஆனாலும் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கின்றது. இந்த போரில் உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிடுவதற்கு ஏதுவாக உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை வாரி வழங்கி வருகின்றது. இதற்கிடையில் உக்ரைன் படைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து துல்லியமாகத் தாக்குதல் நிகழ்த்த ரஷ்ய டிரோன் விமானங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் சிறிய ரக சரக்கு வாகனத்தில் கூட எளிதாக எடுத்துச் சென்று ரஷ்ய டிரோன்களை சுட்டு வீழ்த்த உதவும் அதிநவீன வாம்பயர் (VAMPIRE) ராக்கெட் லாஞ்சர்களை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்கா வழங்கிய ஸ்டிங்கர் ஏவுகணைகள் மூலம் உக்ரைன் ராணுவம் ரஷ்ய டிரோன்களை, சுட்டு வீழ்த்தியது. இந்நிலையில், தற்போது தட்டுப்பாடு காரணமாக அதைவிட அதிநவீன வாம்பயர் ராக்கெட் லாஞ்சர்களை அமெரிக்கா வழங்கயுள்ளது. சிறிய சரக்கு வாகனத்தில் கூட எளிதாக நிருவப்படக்கூடிய இந்த ராக்கெட் லாஞ்சரில், ஒரே சமயத்தில் 4 ஏவுகணைகளைப் பொருத்தி, லேசர் தொழில்நுட்பம் மூலம் வான் மற்றும் நிலத்தில் உள்ள இலக்குகளை வேகமாக நகர்ந்தபடியே துல்லியமாகத் தாக்க முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

Categories

Tech |