அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வின் அடிப்படையில், உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆறாம் இடம் பிடித்துள்ளார்.
அமெரிக்க தரவு புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட், ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் பிரபலமான தலைவர்கள் பற்றிய கருத்துக் கணிப்பை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டில் பிரபலமான தலைவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 39% ஆதரவு பெற்று ஆறாம் இடத்தை பிடித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி 75 % ஆதரவுடன் முதல் இடத்தையும், மெக்சிகோ ஜனாதிபதி ஆண்டர்ஸ் மானுவல் லோபெஸ் 63% இரண்டாம் இடமும், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி 54 % மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். மேலும் பிரேசிலின் ஜெய்ர் போல்சொனரோ, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.