Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மக்களே அலெர்ட்!…… 50,000 கன அடி நீர் வெளியேற்றம்….. வெள்ள அபாய எச்சரிக்கை…..!!!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே உள்ள அணைகள் நிரம்பப்பட்டு வருகிறது. எனவே கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகா அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஓகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் முழு கொள்ளளவு எட்டியது. இதன் காரணமாக அணைக்கு வரும் உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. அதாவது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 23 ஆயிரம் கன அடிக்கு மேல் வரும் பட்சத்தில் 16 கண் மதங்கள் வழியாக திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி காலை நிலவரப்படி வினாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதன் பிறகு இரவு வினாடிக்கு 30,000 கனடியாக அதிகரித்தது. இதனால் உபரி நீர் 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் வெளியேற்றப்பட்டது.

இதற்கிடையில் நேற்று முன் தினம் காலை வினாடிக்கு 40,000 கன அடியாக வந்த நீர் மாலையில் 50,000 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையிலிருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் உபநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி தண்ணீரும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 27 ஆயிரம் கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் அனைத்து நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் காவேரி கரையோரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் நகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள் வாகனங்களில் சென்று ஒளிபெருக்கின் மூலம் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.

Categories

Tech |