Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இவர்களால் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும்”…. பிரதமர் மோடி அதிரடி பேச்சு….!!!!

கோவை மாவட்டத்தை அடுத்த கிணத்துக் கடவு ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் மத்திய அரசின் சார்பாக ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் எனும் தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான 36 மணிநேர மென் பொருள் வடிவமைக்கும் போட்டியானது நேற்று துவங்கியது. இவற்றில் மாற்றுத்திறனாளிகள் அன்றாடம் சந்திக்கும் 6 பிரச்சனைகள், மத்திய அரசின் சமூக நீதித்துறையால் பட்டியலிடப்பட்டு அவற்றுக்கான மென் பொருள் தீர்வு வழங்க மாணவர் குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இப்போட்டி தொடக்கவிழா, புது டெல்லியிலிருந்து காணொலி வாயிலாக நடத்தப்பட்டது. இதில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பங்கேற்றார். அத்துடன் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்ற ஜம்மு காஷ்மீர், உத்தரபிரதேசம், மராட்டியம், பீஹார் உட்பட பல மாநில மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இதனை முன்னிட்டு ஸ்ரீ ஈஸ்வரர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த அகன்ற திரையில் தோன்றி பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது “மாணவர்களின் உற்சாகமும், உத்வேகமும் ஒரு நாட்டின் வெற்றிக்கு இன்றியமையாதது ஆகும். நாட்டின் முக்கியமான பணிகள் பல டிஜிட்டல் தொழில்நுட்ப மயமாக்கப்படும். அது பெரியளவில் புது வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. உலகத்தில் இன்று நிலவிவரும் எந்த பிரச்சினைகளுக்கு இந்திய மாணவர்களால் தீர்வுகாண முடியும்” என்று பேசினார். இவற்றில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழக பிரதிநிதியாக அபிஜித் கண்ட்காலே, ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி தலைவர் ஆர்.மோகன்ராம், கல்லூரி இயக்குனர் ஆர்.ராஜாராம், கல்லூரி முதல்வர் சுதமோகன் ராம், ஆராய்ச்சித் துறை டீன் கருப்புசாமி, தொழில்துறை நல்லுறவு டீன் கண்ணன் நரசிம்மன், அகடெமிக்ஸ் டீன் நிர்மலா, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பல பேர் பங்கேற்றனர்.

Categories

Tech |