Categories
மாநில செய்திகள்

நீங்கள் தொழில் செய்ய விரும்புகிறீர்களா?….. மாதம் 10 லட்சம் வரை வருமானம்….. வெளியான அசத்தல் அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் பால் பொருட்கள் விற்பனையில் பிரபலமானது அமுல் நிறுவனம். இந்த நிறுவனத்திடம் வியாபாரம் செய்ய உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது அமுல் நிறுவனத்தின் லைசன்ஸ் எடுத்து நீங்கள் தொழில் செய்யலாம். அமுலின் உரிமத்தை எடுப்பது மிகவும் எளிதானது. ஆனால் அது பற்றிய முழுமையான தகவலை முதலில் நீங்கள் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். இந்த தொழில் மூலம் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரை விற்பனை செய்ய முடியும். அமுல் தயாரிப்புகளின் குறைந்தபட்ச விற்பனை விலையில் ஒரு குறிப்பிட்ட தொகை நிறுவனம் கமிஷன் வழங்குகிறது. ஒரு பால்பாக்கெட் 2.5%, பால் பொருட்களுக்கு 10%, ஐஸ்கிரீமுக்கு 20%, உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். அதனை தொடர்ந்து அமுல் ஐஸ்கிரீம் பார்லரின் உரிமையை எடுத்துக் கொள்வதில் செய்முறை அடிப்படையான ஐஸ்கிரீம், ஷேக், ஹார்ட் சாக்லேட் பானம், சாண்ட்விச் ஆகியவற்றிற்கு 50% கமிஷனையும், அமுல் தயாரிப்புகளுக்கு 10% வழங்குகிறது.

இதனையடுது நீங்கள் அமுல் அவுட்லெட் உரிமை எடுக்க உங்களிடம் 150 சதுர அடி இடம் இருக்க வேண்டும். உங்களிடம் பொதுவான இடம் இருந்தால் அமுல் நிறுவனம் உங்களுக்கு உரிமையை வழங்கும். இருப்பினும் ஐஸ்கிரீம் பார்லரின் உரிமையாளர்களுக்கு குறைந்தபட்சம் 300 சதுர அடி இருக்க வேண்டும். உங்களிடம் அளவு இடம் இல்லை என்றால் அமுல் உரிமையை வழங்க ரூ. 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதே நேரத்தில் பிராண்ட் செக்யூரிட்டியாக ரூ.50,000, சீரமைப்புக்கு ரூ.4 லட்சம், உபகரணங்களுக்கு ரூ.1 லட்சம் செலவு செய்ய வேண்டும். நீங்கள் அமுல் அவுட்லெட் ரயில்வே பார்லர் அல்லது உரிமை எடுக்க விரும்பினால் நீங்கள் அதில் ரூ.2 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். இதில் திரும்ப பெறாத பிராண்ட் செக்யூரிட்டியாக ரூ.25,000, சீரமைப்புக்கு ரூ.1 லட்சம், உபகரணங்களுக்கு ரூ.75 ஆயிரம் செலவாகிறது. இது குறித்து மேலும் தகவல்களுக்கு நீங்கள் இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.

Categories

Tech |