Categories
உலக செய்திகள்

இந்திய தேசிய கொடியில் “Made in China” Tag…… காமன்வெல்த் சபாநாயகர் மாநாட்டில் வெடித்த சர்ச்சை…..!!!!

கனடாவில் உள்ள ஹாலிஃபாக்ஸ் நகரத்தில் சபாநாயகர்களுக்கான 65 வது காமன்வெல்த் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளில் சபாநாயகர் பங்கு பெற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சபாநாயகர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவும் இந்த மாநாட்டில் பங்கேற்று உள்ளார்.

அதனை தொடர்ந்து காமன்வெல்த் மாநாடு நடைபெற்ற வளாகத்திற்கு லோக்சபா சபாநாயகர் ஒம்பிர்லா தலைமையில் சபாநாயகர் கையில் தேசியக்கொடி இந்திய வண்ண பேரணியாக வந்தனர். அந்த இந்திய தேசிய கொடியில் 100% பாலியஸ்டர் என்ற வாசகத்திற்கு கீழ் ‘Made in China’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் தேசிய கொடியை சீனாவில் தயாரித்து பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் தேசியக்கொடி பயன்படுத்தப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த சபாநாயகர்கள் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அதற்கு இதுவரை அரசு தரப்பில் எந்தவித விளக்கமும் தரப்படவில்லை.

Categories

Tech |