கொரானா பாதிப்புக்குள்ளான வடகொரியா அதிகாரி ஒருவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வெளியேறியதால் வடகொரியா அரசால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வடகொரியாவின் அதிகாரியான ஒருவர் சீனாவில் பணியாற்றி வந்தார். அண்மையில் சீனாவில் இருந்து நாடு திரும்பிய அவருக்கு கொரானா வைரஸ் தொற்று இருந்ததால் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அந்த அதிகாரி அரசாங்க ஊழியர்கள் பயன்படுத்தும் பொது குளியல் அறைக்கு வந்ததால் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் உடனடியாக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அந்நாட்டில் செய்திநிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.