ரஷ்ய உளவாளி பெண் ஒருவர் நேட்டோ அதிகாரிகளை மயக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி ரஷ்ய நாட்டின் உளவாளிகளான செர்கே ஸ்கிரிபால் மற்றும் அவருடைய மகள் யுலிபா ஸ்கிரிபால் ஆகியோர் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு மறுநாள் அதாவது கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி இத்தாலி நாட்டில் வசித்து வந்த மரியா எனும் அழகிய இளம்பெண் ரஷ்யாவிற்கு அவசரமாக கிளம்பி சென்றுள்ளார். அதன் பிறகு மரியாவுக்கு என்ன ஆனது என்கிற விவரம் யாருக்குமே தெரியவில்லை. மரியா என்ற இளம்பெண் பாரிஸ், மால்டா, ரோம் மற்றும் இங்கிலாந்து போன்ற பல நாடுகளுக்கு சுற்றி இருக்கிறார். அதன் பிறகு இத்தாலையில் உள்ள நேப்லஸ் என்ற இடத்தில் மரியா ஒரு நகைக்கடை மற்றும் மதுபான கடையை திறந்து இருக்கிறார்.
இவருடைய கடைக்கு வரும் பெரும் செல்வந்தர்களை தன்னுடைய அழகை காட்டில் மயக்கி உறவில் ஈடுபட்டு அவர்களை தன் வசப்படுத்தியுள்ளார். அதன் பிறகு மரியா நேட்டோ அதிகாரிகள் பலரை தன் அழகை காட்டி மயக்கி தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறார். இவர் நேட்டோ அதிகாரிகளுடன் பழகியதால் லயன்ஸ் கிளப்பில் உறுப்பினராகும் அளவிற்கு பிரபலமாகியிருக்கிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு இத்தாலியை சேர்ந்த ஒருவரை மரியா திருமணம் செய்து கொண்டார். ஆனால் அடுத்த வருடமே மரியாவின் கணவர் உயிரிழந்ததார். இதனால் ஏற்பட்ட பரிதாப உணர்வு தான் மரியாவுடன் நேட்டோ அதிகாரிகள் நெருங்கி பழக காரணமாக இருந்திருக்கிறது.
இப்படி பல நாட்டின் செல்வந்தர்கள், நேட்டோ அமைப்பின் அதிகாரிகள் மற்றும் தூதர்களுடன் நெருங்கி பழகி வந்த மரியா திடீரென கடந்த 2018-ம் ஆண்டு இத்தாலியை விட்டு வெளியேறி ரஷ்யாவிற்கு சென்றிருக்கிறார். அதன் பிறகு மரியாவுக்கு என்ன ஆனதே என்பது யாருக்குமே தெரியாமல் இருந்தநிலையில், தற்போது மரியா பற்றிய உண்மையான தகவல் தெரிய வந்துள்ளது. அதாவது ரஷ்ய நாட்டைச் சேர்ந்த உளவாளி தான் மரியா. இவருடைய உண்மையான பெயர் Olga kolobova. மேலும் மரியா யார் என்று தெரியாமல் நேட்டோ அமைப்பின் உறுப்பினர்கள் வரை அவருடன் பழகிய சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.