மணிலா பேட்டன் கேஸ் துறைமுகத்திலிருந்து 82 பேருடன் கேளத்தான் துறைமுகத்திற்கு பயணிகளின் கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கப்பலில் தீ பற்றி வானளவாக கொழுந்து விட்டு எரிந்தது. இதனை பார்த்து பயணிகள் அலறியதால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து பிலிப்பைன்ஸ் கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடற்கரை வீரர்கள் கப்பலில் தவித்த 23 பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
அதன் பிறகு மீதமுள்ளவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து வானளவு கொழுந்துவிட்டு எறிந்த தீயில் ஏரிந்து உயிரிழப்பதை தடுக்க பலர் கடலில் குதித்தனர். அவர்களை மீட்பு பணியினர் படகுகள் மூலம் மீட்டனர். இதனையடுத்து என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்திற்கான காரணங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.