தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஹனிரோஸ். ஆனால், இவருக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் அமையவில்லை. இந்நிலையில் இவர் மலையாள சேனல் ஒன்றுக்கு கொடுத்த நேர்காணல் ஒன்றில் தனக்கு தமிழ்நாட்டில் ரசிகர் ஒருவர் கோயில் கட்டியுள்ளதாக கூறியுள்ளார்.
அதில் அவர் “பாண்டி என்ற என்னுடைய தமிழ்நாட்டு ரசிகர் ஒருவர் என் முதல் படம் முதலே போனில் பேசி பாராட்டி வருகிறார். என் பிறந்தநாளுக்கு அவர் மக்களுக்கு பாயாசம் வழங்கி வருகிறார். இப்போது அவர் எனக்கு கோயில் கட்டியுள்ளார். இது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.