Categories
உலக செய்திகள்

உக்ரைனில் மீண்டும் தொடங்கிய தானிய ஏற்றுமதி…. லாபம் எவ்வளவு தெரியுமா….? அதிபர் கூறிய தகவல் இதோ…!!

உக்ரைன் நாட்டில் இருந்து தானிய ஏற்றுமதி மீண்டும் தொடங்கியுள்ளது.

ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போரை தொடங்கியதிலிருந்து தானிய ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் உலக அளவில் பல்வேறு நாடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக ஐநா சபை உக்ரைன், ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையே ஒரு புதிய ஒப்பந்தத்தை போட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி உக்ரைன் நாட்டிலிருந்து மீண்டும் தானிய ஏற்றுமதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் போடப்பட்ட நாளிலிருந்து இதுவரை ஒரு மில்லியன் டன் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

இந்த தானிய ஏற்றுமதியினால் ஒவ்வொரு மாதமும் ஒரு மில்லியன் டாலர் வரை வருமானம் கிடைக்கும் எனவும் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். கடந்த திங்கட்கிழமை உக்ரைன் துறைமுகத்திலிருந்து 2 பெரிய கப்பல்களில் தானியங்கள் ஏற்றப்பட்டு இஸ்தான் புல்லுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கப்பல் இன்னும் ஓரிரு நாட்களில் இஸ்தான்புல்லை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உக்ரைனில் இருந்து மீண்டும் தானிய ஏற்றுமதி தொடங்கப்பட்டதால், உலக அளவில் தானியங்களின் விலை கணிசமாக குறையும் என்று துருக்கி தேசிய அமைச்சர் ஹுலுசி அகர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |