Categories
சினிமா

WOW: ஷாருக்கானுடன் இணையும் பிரபல நடிகை…. யார் தெரியுமா?…. வேற லெவல் அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் நடிக்கும் “ஜவான்” படத்தை இயக்குகிறார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை “ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்” சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். ஜாவான் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியாக உள்ளது. எனவே தற்போது படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஜவான் படத்தில் இந்திய திரை உலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜவான் படக்குழுவினர் படத்தில் நடிப்பதற்காக நடிகை தீபிகா படுகோனேவை அணுகிய போது ஷாருக்கான் படம் என்பதால் உடனடியாக ஓகே சொல்லிவிட்டாராம் என்றும் கூறப்படுகிறது.

 

Categories

Tech |