Categories
மாநில செய்திகள்

BIG NEWS: SC, ST மாணவர்களுக்கு சூப்பர் திட்டம்….. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மகிழுங்கள்….!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மருத்துவம் சார்ந்த வேலை வாய்ப்புகளை வழங்கும் திட்டத்தை தாட்கோ அறிவித்துள்ளது. இது பற்றிய தாட்கோ வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, இளநிலை அறிவியல் லைப் சயின்ஸ் பட்ட முடித்த மாணவர்களுக்கு மருத்துவ குறியீடு சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட இருக்கின்றது. இதன் மூலமாக மருத்துவத்துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இந்த திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியின மாணவ மாணவியராக இருக்க வேண்டும்.

மேலும் பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும் தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மூலமாக இணையதளம் வழியாக மூன்று மாதங்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒரு மாணவருக்கு பயிற்சிக்கான கட்டணம் தொகையாக ரூபாய் 15 ஆயிரத்தை தாட்கோ நிறுவனமே வழங்குகின்றது. இந்த பயிற்சி முடிந்தவுடன் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் இந்த பயிற்சியில் சேர்ந்து மாணவர்களுக்கு நேர்முக தேர்வு மூலமாக 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெற்று தரப்படுகிறது. இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கு இணையதளத்தை பார்வையிடலாம் என தாட்கோ நிறுவனம் கூறியுள்ளது.

Categories

Tech |