சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது,
“ஒரு சிலிண்டரின் விலை ரூ.148 உயர்ந்துள்ளது. இது மிக அதிகமானது. மக்களின் அரசு என்று சொல்லுபவர்கள் மக்கள் பயன்படுத்தும் எரிபொருளுக்கு இவ்வளவு விலை ஏற்றத்தை செய்து இருக்க கூடாது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இது போல் ஒவ்வொரு காரியம் செய்யும் போது அதை விவாதம் போது அதைவிட பெரிய காரியத்தை செய்வது தான் பா.ஜ.க.வின் தைரியம். அப்போது இவை மறந்து போய்விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது மறையாது.
டெல்லியில் பாஜக தோற்றதற்கு பொருளாதார, சமூக துறைகளில் பாஜக அடைந்த பின்னடைவுதான் காரணம். இந்த நிலைமை பிற மாநிலங்களில் தொடரும்.
தேர்தலில் யாரை தோற்கடிக்க வைக்க வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். எனவே பாஜக தோற்கடிக்க வேண்டும் என்றுதான் அவர்கள் வாக்களித்து உள்ளனர்.
இது பாஜகவிற்கு எதிராக போய் உள்ளது. இதை மனதில் வைத்து அடுத்தடுத்து நடக்கும் தேர்தல்களில் வியூகங்களை மாற்றி அமைப்போம்.
அதிமுகவால் சிறந்த பட்ஜெட்டை அறிவிக்க முடியும் என்று கருதவில்லை. ஏனென்றால் மாநில அரசின் பொருளாதார பண பலம் மிகவும் குறைவாக உள்ளது.
மாத ஊதியத்தை வழங்கதான் தமிழ்நாடு அரசின் கஜானாவில் பணம் இருக்கிறது சமூக நல திட்டங்களை நிறைவேற்ற பணமில்லை.
மாத ஊதியத்தை வழங்க பலத் துறைகளில் தயக்கம் காட்டுகின்றனர். எனவே வேறு துறைகளில் செலவு செய்யாத பணத்தை எடுத்துதான் பட்ஜெட் தாக்கல் செய்வார்கள்.
ஆகையால் சிறந்த பட்ஜெட்டை அளிக்க முடியாது அதற்கான வாய்ப்பும் கிடையாது.
தேர்தல் வருகிறது என்றதும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று காவிரி டெல்டாவை சொல்லுகிறார்கள். இதுபோல் அறிவிக்க கூடிய அதிகாரம் அரசுக்கு இருக்கிறதா என்று தெரிய வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எந்தந்த தொழில்கள் அனுமதிப்பீர்கள். எந்தந்த தொழில்களை அனுமதிக்கமாட்டீர்கள். எதையும் மக்களுக்கு சொல்லாமல் ஒரே வார்த்தையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறுவித்துவிட்டார்கள்.
ஒரு காலத்தில் மக்கள் இதையெல்லாம் ஏற்றுயிருக்கலாம் ஆனால் இப்போது ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இது தேர்தலுக்காக செய்யப்படும் கூத்து என்று மக்களுக்கு தெரியும். இந்த அறிவிப்பால் அதிமுக எதுவும் அடையப் போவதில்லை ஏமாற்றம்தான் கிடைக்கும்” என விமர்சித்துள்ளார்.