Categories
சினிமா தமிழ் சினிமா

அவதூறு பரப்பிய பாக்யராஜ்…. கடுப்பான நடிகர் விஷால்…. திடீர் நோட்டீஸ் ஆல் பரபரப்பு‌….!!!

பிரபல நடிகருக்கு விஷால் ஒழுங்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகர் விஷால் தலைமையில் ஒரு அணியும், இயக்குனர் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டனர். இதில் விஷால் வெற்றி பெற்று பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்நிலையில் இயக்குனர் பாக்கியராஜ் நடிகர் சங்கத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக விஷால் பாக்யராஜுக்கு ஒழுங்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி நடிகர் சங்க தேர்தல் முறையாக நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பொறுப்பேற்றுள்ளார்கள்.

நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறீர்கள். சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் சங்கத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதால், சங்கத்தின் உறுப்பினர்கள் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதன் காரணமாக செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சங்கத்திற்கு விரோதமாக செயல்பட்டு வரும் உங்களை ஏன் சங்கத்தில் இருந்து நீக்க கூடாது என்கிற கேள்விக்கு உரிய முறையில் பதில் தெரிவித்து கடிதம் எழுதி அனுப்ப வேண்டும். நீங்கள் கடிதம் எழுதி அனுப்பாவிட்டாலும், உங்களுடைய பதில் திருப்திகரமானதாக இல்லாவிட்டாலும் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |