இலங்கை குழந்தைகள் பசியால் தவிர்ப்பதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இங்கு அன்னிய செலவாணி பற்றாக்குறை ஏற்பட்டதால் பெருமளவு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக இலங்கை அரசு சர்வதேச நிதிய குழுவிடம் கடன் கேட்டுள்ளது. இந்நிலையில் ஐநா குழந்தைகள் அமைப்பின் தெற்காசிய இயக்குனர் ஜார்ஜ் லாரியா ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் தினந்தோறும் இலங்கை குழந்தைகள் பசியோடு தூங்குகின்றனர் என்று கூறியுள்ளார். தெற்காசியா முழுவதும் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நான் இலங்கையில் பார்த்தது தெற்காசிய நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை என கூறியுள்ளார் . மேலும் இலங்கை குழந்தைகளுக்காக ஐநா சபை 25 மில்லியன் டாலர் நிதி உதவிக்கான கோரிக்கையையும் விடுத்துள்ளது.