அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டால் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் தொண்டர்கள். நல்லா எண்ணிப் பாருங்க. நீங்க எல்லாம் இங்க வந்திருக்கீங்க. எல்லா ஊடகத்திலும் காமிச்சீங்க. ஒரு கட்சியினுடைய உயர்ந்த பொறுப்பில் இருக்கின்றார். சாதாரண தொண்டன் செய்யவில்லை. இந்த கட்சியினுடைய உயர்ந்த பொறுப்பு. அந்த பொறுப்பு என்ன பொறுப்பு என்று உங்களுக்கு தெரியும் ?
அந்த பொறுப்பு வகிக்கின்ற ஒருவரே கொள்ளை கூட்டத்துக்கு தலைமை தாங்குற மாதிரி, டெம்போ ட்ராவல் வேனில் வருகிறார். இரண்டு பக்கமும் ரவுடிகளை அழைத்துக்கொண்டு வருகிறார். அதற்கு காவல்துறை பாதுகாப்போடு வராங்க. அப்படி பிரதான கேட்ட உடைக்கிறாங்க. அந்த ரவுடிகள் எல்லாம் வந்து பிரதான கதவை காலால் எட்டி உதைக்கின்ற காட்சி உங்க தொலைக்காட்சிகள் எல்லாம் காண்பித்தீர்கள்.
நாட்டு மக்களை பார்த்தார்கள், நாங்கள் தொண்டர்கள் மட்டுமல்ல, நாட்டு மக்கள் எல்லாரும் பாத்தீங்க, ஊடகத்திலும் வந்தது. இப்படிப்பட்டவர்களை எப்படி தொண்டர்கள் மன்னிப்பார்கள் ? தொண்டர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் ? ஆகவே தொண்டர்கள்தான் இந்த கட்சி, தலைவர்களுக்கல்ல. அவர் இணைகின்ற பொழுது எல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வோடு தான், அவரை இணைச்சு அவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்தோம்.
ஆனால் அவர் கீழ்த்தனமான செயலில் ஈடுபட்டு இருக்கின்ற பொழுது, அவரின் எண்ணம் இப்படி இருக்கின்ற போது, திமுகவுக்கு உடந்தையாக, பினாமியாக இருக்கின்ற போது, எங்களுடைய கட்சியை உடைக்க வேண்டும், பிளவுபடுத்த வேண்டும், அவதூறு செய்தி பத்திரிகையில் வரவேண்டும், ஊடகத்திலே வரவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்.
அதுமட்டுமல்ல தலைமை கழகம் ஒரு புனிதமான இடம். பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தொண்டர்களுக்கும், கொடையாக கொடுக்கப்பட்ட இடம் இந்த இடம். இந்த புனிதமான இடத்தில், இருபெரும் தலைவர்கள் இங்கே பணியாற்றிய இடத்தில், இவரே ஒரு உயர்ந்த பொறுப்பு இருந்து கொண்டு, முன் நின்று தலைமை தாங்கி, கதவுகளை உடைத்து பொருளை சேதப்படுத்தி பொருட்களை கொள்ளையடித்து சென்றால் எப்படி தொண்டன் மன்னிப்பான் ? என தெரிவித்தார்.