Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்று வந்த மாணவி…. லவ் டார்ச்சர் செய்த வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கூலி தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

சமீப காலமாக பள்ளி மாணவிகள் தங்களுக்கு தெரிந்த நபரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் காதலிப்பதாக கூறி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் சிவகண்ணன்(31) என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான சிவகண்ணன் 13 வயதுடைய 9-ஆம் வகுப்பு மாணவியை காதலித்துள்ளார். அந்த மாணவி பள்ளிக்கு சென்று வரும்போது சிவகண்ணன் காதலுக்குமாறு வற்புறுத்தி அவரை தொந்தரவு செய்துள்ளார்.

மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி தன்னை காதலிக்குமாறு சிவகண்ணன் மாணவியை மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றார் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிவாவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சிவகண்ணனுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.

Categories

Tech |