தேசிய அலுமினியம் நிறுவனத்தில் நிரப்பப்படவுள்ள 189 பட்டதாரி இன்ஜினியர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இதற்கு தகுதியான நபர்களிடமிருந்து வரும் செப்டம்பர் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலிப்பணியிடங்கள்- 189
பிரிவு வாரியான காலியிடங்கள் விபரம்
1. Mechanical-58
2. Electrical-41
3. Instrumentation-32
4. Metallurgy-14
5. Chemical-14
6. Mining (MN)- 10
7. Civil (CE) -7
8. Chemistry(CY) -13
தகுதி என்ன?
பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தது 65 % மதிப்பெண்களுடன் பிஇ, பிடெக் முடித்திருக்க வேண்டும். அதன்பின் வேதியியல் பிரிவில் எம்.எஸ்சி., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சியின்போது மாதந்தோறும் ரூ.40,000 – 1,40,000 வழங்கப்படும். அதன்பின் மாதம் ரூ.60,000 – 1,80,000 வழங்கப்படும்.
வயது வரம்பு
11.9.2022 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை
GATE – 2022 நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும்முறை
www.nalcoindia.com எனும் இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்
ரூபாய். 500. எஸ்சி., எஸ்டி., பிரிவினருக்கு ரூபாய்.100 ஆகும். இதை ஆன்லைன் வாயிலாக செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்
11/09/2022 மாலை 5:30 மணி ஆகும்.
மேலும் விபரங்களை https://mudira.nalcoindia.co.in/rec_portal/Default.aspx அல்லது https://mudira.nalcoindia.co.in/iorms/UploadData என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.