தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதன் பிறகு பிரேமம் என்ற திரைப்படத்தை கடந்த 2015-ம் ஆண்டு இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 7 வருடங்களுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் ஒரு புதிய படத்தை எடுத்துள்ளார்.
இந்த படத்தின் பெயர் கோல்டு. இந்த படத்தில் பிரித்திவிராஜ் மற்றும் நயன்தாரா ஆகியோர் முதன்மை காரப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 7-ம் தேதி கோல்ட் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் பிரேமம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் படம் என்பதால் கோல்டு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.