Categories
உலக செய்திகள்

இனி 90 நாட்கள் மட்டுமே…. பிரான்ஸ் அரசின் புதிய அறிவிப்பு…. அதிர்ச்சியில் இங்கிலாந்து….!!!!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் பிரான்சில் 90 நாட்கள் மட்டுமே தங்க முடியும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மக்கள் விசா இல்லாமல் 90 நாட்கள் மட்டுமே பிரான்சில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இங்கிலாந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பிரெஞ்சு காரர்கள் பலர் ஐரோப்பிய மற்றும் வெளியுறவு விவகார அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். அதில் 90 நாட்கள் மட்டுமே விசா இல்லாமல் தங்க முடியும் என்ற அறிவிப்பு இங்கிலாந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே முன்பு இருந்தது போல 180 நாட்களுக்கு விசா இல்லாமல் தங்கு முடியும் என்று நடைமுறையை மீண்டும் அமலுக்கு கொண்டுவர வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு பிரான்ஸ் அரசு 90 நாட்கள் மட்டுமே விசா இல்லாமல் தங்க முடியும் என்ற முடிவை ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ளது. இதில் எங்களால் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது என கூறியுள்ளது. அதோடு இங்கிலாந்து தான் ஏற்கனவே இருந்த தடையில்லா போக்குவரத்து சேவை திட்டத்திலிருந்து வெளியேறுது எனவும் பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. அதாவது இங்கிலாந்து தான் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியது என பிரான்ஸ் அரசு கூறியுள்ளது.

Categories

Tech |