Categories
தேசிய செய்திகள்

என் மனைவி டார்ச்சர் பண்றா!…. தாங்க முடியாமல் கணவன் செய்த வினோத செயல்…. பரபரப்பு…..!!!!!

குடும்ப தகராறின்போது மனைவி அடிப்பதைத் தாங்க முடியாமல் கணவர் மரத்தில் ஏறி அமர்ந்த சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது. 

உத்தரபிரதேசத்தில் மனைவியுடனான சண்டை போட்ட பின் 42 வயதான ராம் பிரவேஷ் என்பவர் அங்குள்ள மரத்தில் ஏறி தப்பிபிழைத்துள்ளார். 80 அடி உயரம் உள்ள மரத்தில் அவர் ஏறியுள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தத் தொடங்கினர். அதாவது ராம் மீதுள்ள அன்பினால் அவர்கள் போராட்டம் நடத்தவில்லை. ஏனெனில் ராம் 80 அடி உயரத்தில் இருந்தால் அவர் அருகில் உள்ள அனைத்தையும் பார்க்க முடியும் எனவும் இது அண்டை வீட்டாரின் தனியுரிமையில் தலையிடுவதாகவும் அப்பகுதியினர் சுட்டிக் காட்டினர்.

முன்பே அக்கம் பக்கத்திலுள்ள பெண்கள் ராம் தங்களை எட்டி பார்ப்பதாக புகார்களை எழுப்பத் தொடங்கினர். இதற்கிடையில் ராம் மரத்திலிருந்து கீழே இறங்காததால் அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். ஆனால் காவல்துறையினர் ராமின் புதிய குடியிருப்பை வீடியோவில் பதிவு செய்துவிட்டு திரும்பியதைத் தவிர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர். ராம் மற்றும் அவரது மனைவிக்கு இடையில் கடந்த 6 மாதங்களாக சண்டை நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது ராம் மரத்தின் உச்சியில் இருப்பிடம் அமைத்து அங்கு உணவு மற்றும் தண்ணீரை கயிறுகட்டி கொண்டு செல்வது வேடிக்கையாக அமைந்துள்ளது.

Categories

Tech |